

கர்நாடக மாநிலத்தில் ஓடும் பேருந்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் 2 தனியார் பேருந்துகள் ஓடும் போதே எரிந்து சாம்பலாகின. இதில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
கடந்த ஓராண்டில் 6 பேருந்துகள் எரிந்து சாம்பல் ஆனதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூருவில் இருந்து மங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்து உப்பினங்கடி அருகே சாலையின் தடுப்பில் மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்ததில், பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. விபத்து நேரத்தில் உடனடியாக பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் 32 பயணிகளையும் இறக்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் 8 பேர் படுகாயமடைந்து புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூருவிலும் விபத்து
நேற்று பிற்பகல் கோலார் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி யில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் பேருந்து கிருஷ்ணராஜபுரம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதியது. இதனால் டீசல் டேங்க் தீப்பிடித்தது.
பேருந்து முழுவதும் தீப் பிடித்ததால் பயணிகள் அலறி யடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் 3 பேர் அபாய கட்டத்தில் இருப்பதால் சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து ஆபத்துகள்
கர்நாடகத்தில் கடந்த ஓராண்டில் 6 தனியார் சொகுசு பேருந்துகள் சாலையின் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. பெங்க ளூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்தில் 45 பேரும், பெங்களூருவில் இருந்து மும்பை சென்ற பேருந்தில் 7 பேரும் பலி யாகியுள்ளனர். இந்த விபத்து களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 தினங் களில் 2 தனியார் பேருந்துகள் மீண்டும் விபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசும்,போக்குவரத்துத் துறையும் தனியார் சொகுசு பேருந்துகளை கண்காணிப்பதில் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.