Last Updated : 03 Dec, 2014 04:44 PM

 

Published : 03 Dec 2014 04:44 PM
Last Updated : 03 Dec 2014 04:44 PM

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது: ஜேட்லி

நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை இனி மாற்றி அமைக்க முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினார்.

ஸ்ரீநகரில் இன்று அவர் அறிவுஜீவிகள் அடங்கிய சபையில் உரையாற்றிய போது, “வன்முறை மூலம் 1.25 பில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டை பிளந்து விடலாம் என்று நினைப்பவர்கள் தவறான புரிதலையுடையவர்கள்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இந்த அடிப்படை எதார்த்தத்தை உலகின் எந்த சக்தியாலும் மாற்ற முடியாது.

ஆம்! பிரச்சினைகள் இருக்கின்றன, நாங்கள் அதனை விவாதித்து தீர்க்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

இவர், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது சாட்டர்காமில் இரண்டு இளைஞர்கள் இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து ஜேட்லி கூறும் போது, “பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக என்ன நடந்தது என்பதைக் கண்டறியுமாறு என்னிடம் கூறினார். நான் உண்மையைக் கண்டறிந்தேன், இந்த இடத்தில் நான் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறேன், இந்த துயர சம்பவத்திற்கு எனது ட்விட்டரில் நான் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கேட்டேன், இவ்வாறு மன்னிப்பு கேட்ட ஒரே பாதுகாப்பு அமைச்சர் நான் மட்டுமே.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் ஒரு மாதத்திற்குள் அடையாளம் காணப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தர அமைதியை வேண்டுபவர்கள் நாங்கள். ஜம்மு காஷ்மீர் செழிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்” என்றார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் கைவினை பொருள் கலைஞர்கள் உலகிலேயே தலை சிறந்தவர்கள் என்று புகழாரம் சூட்டியதோடு, பூவுலகின் சொர்க்கம் என்று காஷ்மீரை அழைக்க கடவுள் இந்த மண்ணிற்கு பரிசு அளித்துள்ளார். அதனை நாம் வளர்த்தெடுப்போம் என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x