Last Updated : 26 Dec, 2014 01:57 PM

 

Published : 26 Dec 2014 01:57 PM
Last Updated : 26 Dec 2014 01:57 PM

ஜம்மு காஷ்மீரில் கைகோக்கும் முப்தி - ஒமர் கட்சிகள்; ஜார்க்கண்ட் முதல்வராக ரகுவர் தாஸ் தேர்வு - ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

ஜார்க்கண்டின் புதிய முதல்வராக பாஜக தேசிய துணைத் தலை வர் ரகுவர் தாஸ் நேற்று தேர்ந் தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்மூலம் பழங்குடியினத் தைச் சேராத ஒருவர் முதன்முறை யாக அங்கு முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அரசிய லில் திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு கூட்டணி 42 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, பாஜக மேலிட பார்வையாளர் ஜே.பி.நட்டா தலைமையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கள் கூட்டம் நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் பாஜக சட்டப்பேரவை தலைவராக ரகுவர் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து மாநில ஆளுநர் சையது அகமதை நேற்று சந்தித்த ரகுவர் தாஸ், ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, மாநில பாஜக தலைவர் ரவீந்திர ராய், கூட்டணி கட்சித் தலைவர் சுதேஷ் மஹதோ உடன் இருந்தனர்.

பின்னர் தாஸ் செய்தியாளர் களிடம் கூறும்போது, “நாளை பதவி யேற்பு விழாவை நடத்தலாம் என ஆலோசனை கூறினோம். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்” என் றார். ரகுவர் தாஸ் ஏற்கெனவே துணை முதல்வராக பதவி வகித் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதீஷ் கண்டனம்

பிஹார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் கூறும்போது, “ஜார்க் கண்ட் மாநிலம் உருவானது முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் களே முதல்வராக பதவி வகித்துள்ள னர். இப்போது இந்த மரபை மாற்றி பழங்குடியினத்தைச் சேராத ஒருவரை பாஜக முதல்வராக தேர்ந் தெடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது பழங்குடியின மக்கள் மீது பாஜக நம்பிக்கை இழந்துவிட்டதை உணர்த்துவதாக உள்ளது” என்றார்.

காஷ்மீரில் திடீர் திருப்பம்

காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர் தலில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்கள் கொண்ட பேரவை யில் மக்கள் ஜனநாயக கட்சி 28, பாஜக 25, தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அந்த கட்சி சார்பில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற் றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே மக்கள் ஜனநாயக கட்சிக்கு காங்கிரஸ் தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்தது. ஆனால் எந்தக் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் இருந்தது

தேர்தல் முடிவுகள் வெளியான போதே மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்தார். ஆனால் அந்தக் கட்சி எழுத்துபூர்வமாக ஆதரவு கோர வேண்டும் என்று ஒமர் நிபந்தனை விதித்திருந்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் எழுத்துபூர்வமாக ஆதரவு கோரி தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியும் உடனடியாக பதில் அளித் துள்ளது. அந்த கட்சி சார்பில் நேற்றே ஆதரவு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரில் பரமஎதிரியாக செயல்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் திடீரென கைகோத்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி மாநிலத்தின் புதிய முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது பதவியேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் அழைப்பு

இதனிடையே ஆட்சியமைப்பது தொடர்பாக மாநில ஆளுநர் என்.என்.வோரா, மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜகவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது மற்றும் மாநில பாஜக தலைவர் ஜூகல் கிஷோர் ஆகியோருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

இருகட்சிகளின் தலைவர் களும் விரைவில் ஆளுநரை சந்தித்துப் பேசுவார்கள் என்று தெரிகிறது.

ஒமர் லண்டன் பயணம்

ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா லண்டனில் சிறு நீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை பார்ப்பதற்காக ஒமர் இன்று லண்டன் புறப்படுகிறார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், லண்டன் சென்றுவிட்டு விரைவில் காஷ்மீர் திரும்புவேன். அதுவரை பொறுமையாக காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தொடர்ந்து முயற்சி

இந்த திடீர் அரசியல் திருப்பங் கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் பாஜக தரப்பில் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர் பாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், நிருபர்களிடம் நேற்று கூறியபோது, காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். அவரது கனவை நனவாக்க மாநிலத்தில் வலுவான ஆட்சியை அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. காஷ்மீரின் முக்கிய கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x