ஹரியாணாவின் 6 அரசியல்வாதிகள் வெளி மாநிலங்களில் போட்டி

ஹரியாணாவின் 6 அரசியல்வாதிகள் வெளி மாநிலங்களில் போட்டி
Updated on
1 min read

சிறிய மாநிலங்களில் ஒன்றான ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த ஆறு அரசியல்வாதிகள் மக்களவை தேர்தலில் வெளிமாநிலங்களில் போட்டியிடுகின்றனர்.

ஹரியாணாவின் ஹிசாரை சேர்ந்த அர்விந்த் கேஜ்ரி வால், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார்.

டெல்லியின் மற்றொரு முன்னாள் முதல்வர் சுஷ்மா ஸ்வராஜ், ஹரியாணாவின் அம்பாலாவை சேர்ந்தவர். பாஜக சார்பில் மத்தியப்பிரதேச மாநிலம் விதீஷாவில் போட்டியிடுகிறார். பிவானியை சேர்ந்த ஓய்வு பெற்ற படைத்தளபதியான வி.கே.சிங், உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

பரீதாபாத்தை சேர்ந்த கர்டர்சிங் பதானா, உத்தரப்பிரதேசத்தின் கைரானாவிலும், ரோஹதாக்கை சேர்ந்த மஹந்த் ஜாந்த்நாத் ராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஜஜ்ஜரை சேர்ந்த ராக்கி பித்லன் மேற்கு டெல்லியிலும் போட்டியிடுகின்றனர்.

ஹரியாணாவின் முக்கிய அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான சௌத்திரி தேவிலால், 1989-ல் ஹரியாணாவின் ரோஹதாக், ராஜஸ்தானின் சிகார் மற்றும் பஞ்சாபின் பெரோஸ்பூர் என மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், தேவிலாலுக்கு பெரோஸ்பூரில் மட்டும் தோல்வி கிடைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in