ட்விட்டரில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட‌ மேக்தியின் நண்பர்கள் 5 பேர் பெங்களூருவில் கைது?

ட்விட்டரில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட‌ மேக்தியின் நண்பர்கள் 5 பேர் பெங்களூருவில் கைது?
Updated on
2 min read

ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் ஐ.எஸ். தீவிரவாத‌ அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேக்தியின் நண்பர்கள் 5 பேரை பெங்களூரு போலீஸார் நேற்று கைது செய் துள்ளதாக தெரியவந்துள்ளது.

“பெங்களூருவை சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) என்ற‌ பொறியாளர் 'ஷமிவிட்னஸ்' என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்தொடர்கின்றனர். ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் மேக்தி ஈடுபட்டுள்ளார்” என்று பிரிட்டனை சேர்ந்த 'சேனல் 4' தொலைக் காட்சி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பெங்களூரு த‌னிப்படை போலீஸார் மேக்தியை கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய குற்றப்பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு போலீஸாரும் மேக்தியிடம் நேற்று விசாரணையை தொடங்கினர்.

ட்விட்டரில் தீவிர‌ ஆய்வு

கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப் பட்ட மேக்தியின் 'ஷமிவிட்னஸ்' ட்விட்டர் பக்கத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரம் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், அரபியிலும் உள்ள ட்வீட்கள் அனைத்தையும் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் மேக்தியை பின் தொடர்ந்த 17,700 பேரையும் விசா ரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அதில் 3-ல் 2 பங்கு பேர் ஐ.எஸ். ஆதர வாளர்களாகவும், சிலர் அதன் உறுப்பினர்களாகவும் இருந்துள் ளனர். மேலும் அவரை பின் தொடர்ந்தவர்களில் 70 சதவீதம் பேர் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த வர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மேக்தியின் 'ட்விட்டர் பக்கத்தை கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த வர்களும், கர்நாடகத்தில் மைசூரு, மங்களூரு பகுதியை சேர்ந்தவர் களும் அதிகளவில் பின் தொடர்ந் துள்ளனர். எனவே இவர்கள் அனைவரின் கணக்குகளையும் ட்விட்டர் வலைதள நிர்வாகத்தின் உதவியுடன் தேசிய புலனாய்வு பிரிவு போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

கர்நாடகத்தில் 5 பேர் கைது?

இதனிடையே மேக்தியின் 'ஷமிவிட்னஸ்' ட்விட்டர் பக்கத்தை போலவே, 'ஷமி விட்னஸ்2' , 'ஷமிவிட்னஸ்_2' என்ற ட்விட்டர் பக்கங்களும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளன. இதில் 'ஷமி விட்னஸ்2' பக்க‌த்தை 717 பேரும், 'ஷமிவிட்னஸ்_2' பக்கத்தை 1,249 பேரும் பின் தொடர்ந்துள்ளனர். இந்த 3 பக்கத்திலும் இருந்த முக்கிய செயல்பாட்டாள‌ர்களை போலீஸார் விசாரிக்க உள்ளனர்.

அதுமட்டுமன்றி மேக்தி வேறு பெயர்களில் நிர்வகித்த 2 ட்விட்டர் பக்கங்களையும் போலீஸார் கண் டறிந்துள்ளனர். சந்தேகத்துக்குரிய 7 ட்விட்டர் பக்கங்களில் குறிப்பிட்ட சிலர் மேக்தியை பின் தொடர்ந்து, தீவிரமாக செயல்பட்டதையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக மைசூரை சேர்ந்த 2 பேர், மங்களூருவை சேர்ந்த 2 பேர், பெங்களூருவை சேர்ந்த ஒருவர் என 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூரில் ரகசிய இடத்தில் விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் இதுகுறித்து உறுதியான தகவலை வெளியிட முடியாது என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்கு குறி

இதனிடையே மேக்தியை கைது செய்த பெங்களூர் போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயலின் டிவிட்டர் கணக்குக்கு, “பழிக்கு பழி வாங்குவோம்” என்று சிலர் பதிவேற்றம் செய்திருந்தனர். இதுகுறித்து அபிஷேக் கோயல் கூறும்போது, “அவர்களது ட்விட்டர் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்நிலையில் நேற்று சிட்னி தாக்குதலை தொடர்ந்து எங்க ளுடைய அடுத்த குறி பெங்களூரு தான் என்று இஸ்லாமிக் ஸ்டேட் மீடியா என்ற ட்விட்டர் கணக்கில் ஐஎஸ் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் கூறும்போது,'' மிரட்டல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை''

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in