

கொல்கத்தாவில் கடந்த 1993-ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இது இடதுசாரி கட்சிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான 700 பக்க அறிக்கை தயாராகி உள்ளது. இதை மாநில அரசிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக, அதில் உள்ள அம்சங்கள் குறித்து விசாரணை ஆணைய தலைவர் சுஷாந்தா சட்டர்ஜி நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அப்போது அவசியமே ஏற்படவில்லை. ஆனாலும், அப்போதைய ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவதற்காக காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். அப்போதைய மாநில உள்துறை அதிகாரிகளும் காவல் துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும்தான் இந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த சம்பவத்தின்போது போலீஸார் 75 தடவைக்கு மேல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இது ஜாலியன் வாலாபாக் படு கொலையைவிட மிகவும் மோசமானது. இந்த சம்பவத்தில் பலியான வர்களின் குடும்பத்தினர் பொருளா தார ரீதியாக பின்தங்கி இருப்ப தால் அவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர் களுக்கு ரூ.5 லட்சமும் இழப் பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி மாநில தலைமைச் செய லகத்தை நோக்கி பேரணி நடை பெற்றது. அப்போது ஆட்சியி லிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி, தேர்தலில் முறைகேடு செய்ததாகக் கூறி, வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட் டனர். மம்தா பானர்ஜி முதல்வ ரான பிறகு கடந்த 2011-ம் ஆண்டு இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சுஷாந்தா சட்டர்ஜி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது ஜோதி பாசு தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள் ளிட்ட இடது முன்னணி தலைவர் கள், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர் களிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது. எனினும், மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்தவில்லை.