Published : 21 Dec 2014 10:34 AM
Last Updated : 21 Dec 2014 10:34 AM

குடியரசுத் தலைவர் பிரணாப் அளித்த விருந்தில் நரேந்திர மோடி - மம்தா பரஸ்பரம் நலம் விசாரிப்பு

பாஜகவுக்கு எதிராக கடும் குற்றச் சாட்டுகளை சமீபகாலமாக தெரி வித்துவரும் மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று முன் தினம் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தின் போது, மோடி, மம்தா சந்திப்பு நிகழ்ந்தது.

மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜியின் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிரின்ஜோய் போஸ், குணால் கோஷ் ஆகியோரை சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் மாநில அமைச்சர் மதன் மித்ராவும் கைது செய்யப்பட்டார்.

இதனால் கடும் கோபமடைந்த மம்தா பானர்ஜி, பாஜகவை கடுமை யாக விமர்சித்து வருகிறார். பர்த்வான் வெடிகுண்டு வழக்கு, நாட்டின் சில பகுதிகளில் மதரீதி யாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஆகியவை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச் சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ்விருந்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, அங்கு வந்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x