

காங்கிரஸ் கட்சிக்கு ‘கை’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தேர்தல் ஆணையம், மத்திய அரசு, மகாராஷ்டிரம் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
புனேவைச் சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் இந்த வழக்கை தொடர்ந்திருந் தார். அவர் தனது மனுவில், “காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் மகாராஷ்டிர மாநில காவல் துறையின் இலச்சினையை ஒத்துள்ளது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காங்கிரஸ் கட்சி பரா மரிப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மாநில உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி மோகித் ஷா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.என்.காச்சவே ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், இம்மனு தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, மகா ராஷ்டிர மாநில அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை ஜனவரி 17-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.