

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தூத்துக்குடியில் ஒரு நகைக் கடையில் 8 கிலோ தங்கம் மற்றும் ரூ. 2.5 லட்சம் கொள்ளை போனது. கொள்ளைபோன நகை களை மீட்க, தமிழக போலீஸார் உத்தரப்பிரதேசத்தில் முகாமிட் டுள்ளனர்.
தூத்துக்குடியில் கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளைக் கும்பல் தலைவன் ராம்பாபு ஹாபுடா அலிகர் மாவட்டம் அக்ராபாத்தை சேர்ந்தவர். அவரை அழைத்துக் கொண்டு, கோவில்பட்டி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ராம்பா தலைமையில் 6 பேர் கொண்ட தமிழக காவல் துறையினர் கடந்த திங்கள்கிழமை அலிகர் வந்தனர்.
இக்குழுவினர். அக்ராபாத்தில் உள்ள ராம்பாபுவின் வீடு, காஸ் கஞ்ச் மாவட்ட தேசிய வங்கியில் உள்ள அவரது லாக்கர் ஆகிய வற்றில் சோதனை நடத்தினர். இதில், நகைகள் கிடைக்க வில்லை. ஆனால் அதுதொடர் பான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அலிகர் மாவட்ட சிறப்புக் காவல் துறை கண்காணிப்பாளர் ரவீந்திரா கவுட் கூறும்போது, “தூத்துக்குடி கொள்ளை தொடர்பாக அக்ரா பாத்தில் சில இடங்களில் விசாரணை செய்து சோதனை நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்தோம். தேவை யான உதவியும் செய்தோம்” என்றார்.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு திருப்பூரில் கொள்ளை யடித்தவர்களை தேடி, தமிழக காவல்துறையினர் அலிகர் வந்து விசாரித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.