மோடியை எதிர்த்து திருநங்கை போட்டி

மோடியை எதிர்த்து திருநங்கை போட்டி

Published on

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து திருநங்கையான கமலாபாய்(65) சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து கமலா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘சிவனின் பல உருவங்களில் ஒன்றான அர்தநாரீஸ்சுவரர் வழியில் பிறந்தவர்கள் நாங்கள்.

மக்களுக்காக சேவை செய்துவரும் எனக்கு, தனி யாக குடும்பமும் கிடையாது. நூற்றுக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மணம் செய்து வைத்திருக்கிறேன்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சட்டப்பேரவை உறுப் பினராக, மேயராக மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் மேயராக இருந்த திருநங்கைகள் மீது இதுவரை எந்த ஊழல் புகாரும் வந்தது கிடையாது. அதுபோல் எனக்கும் வாய்ப்பளித்தால் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்வேன். மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தி சிலர் லஞ்சம் தர முன்வந்தனர்” என்றார்.

இவரது தீவிர ஆதரவாளரும், வாரணாசியில் முன்நின்று போட்டியிட வைக்கும் விக்ரம் பரத்வாஜ் கூறுகையில், ‘மோடி வேட்புமனு தாக்கல் செய்யும் அதேநாளில் கமலாபாயும் மனு தாக்கல் செய்வார். இவருக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் இருந்து சுமார் பத்தாயிரம் திருநங்கைகள், பிரச்சாரம் செய்ய வரவுள்ளனர்’ என்றார்.

கடந்த 2007-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கங்காநகர் தொகுதியில் போட்டியிட்ட கமலாபாய் சுமார் முப்பதாயிரம் வாக்குகள் பெற்றார். 2012-ல் நடந்த தேர்தலில் அவரது வேட்புமனுவில் இருந்த தவறு காரணமாக ஏற்கப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in