Published : 18 Dec 2014 13:12 pm

Updated : 18 Dec 2014 18:03 pm

 

Published : 18 Dec 2014 01:12 PM
Last Updated : 18 Dec 2014 06:03 PM

காஷ்மீரில் கடும் குளிர்

காஷ்மீரில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. லேஹ் பகுதியில் நேற்றிரவு மைனஸ் 15 டிகிரியாக குளிரின் அளவு பதிவாகியுள்ளது.

இதேபோல் கார்கில், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடும் குளிர், உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் சராசரி குளிர்நிலை 4.5 டிகிரியாக உள்ளது.

காஷ்மீரில் கடும் குளிர்லேஹ்மைனஸ் 15 டிகிரி

You May Like

More From This Category

More From this Author