Last Updated : 06 Dec, 2014 11:50 AM

 

Published : 06 Dec 2014 11:50 AM
Last Updated : 06 Dec 2014 11:50 AM

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி அரசு: தலா 10 அமைச்சர்கள் பதவியேற்பு

மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் இணைந்து, சிவசேனா ஆட்சி யில் பங்கேற்றது. இரு கட்சி களின் சார்பில் தலா 10 அமைச்சர்கள் நேற்று பதவி யேற்றுக் கொண்டனர். சிவசேனா வுக்கு 5 கேபினட் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் பாஜக சிறுபான்மை அரசுடன் சிவசேனா இணைவது தொடர் பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 12 இடங்கள் அளிக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

நேற்று பதவியேற்பு விழா நடந்தது. ஆளுநர் சி.எச். வித்யாசாகர் ராவ் 20 அமைச்சர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இரு கட்சிக ளிலும் தலா 10 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதில், தலா 5 கேபினட் துறைகள் ஒதுக்கப் பட்டன.

சிவசேனாவைச் சேர்ந்த மேலும் 2 பேர் அடுத்த அமைச் சரவை விரிவாக்கத்தின் போது பதவியேற்பர் எனத் தெரிகிறது. குளிர்காலக் கூட்டத்தொடருக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம்.

பாஜக தரப்பில் கிரிஷ் பபட், கிரிஷ் மகாஜன், சந்திரசேகர் பவன்குலே, பாபன்ராவ் லோனிகர், ராஜ்குமார் பாதுலே ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், ராம் ஷிண்டே, விஜய் தேஷ்முக், ரஜே அம்ரிஷ் அத்ரம், ரஞ்சித் பாட்டீல், பிரவீண் போட் ஆகியோர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சிவசேனா தரப்பில், திவாகர் ராவத், சுபாஷ் தேசாய், ராம்தாஸ் கதம், ஏக்நாத் ஷிண்டே, தீபக் சவந்த் ஆகியோர் கேபினெட் அமைச்சர்களாகவும், சஞ்சய் ராதோட், தாதா பூஷே, விஜய் ஷிவ்தாரே, தீபக் கேசர்கர், ரவீந்திர வைகர் ஆகியோர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ் அரசு பொறுப்பேற்று 35 நாட்களே ஆன நிலையில், சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் குறுகிய நாட்கள் அமர்ந்து தற்போது ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

இதன் மூலம் 15 ஆண்டு களுக்குப் பிறகு, மகாராஷ்டிரத் தில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியிலமர்ந்துள்ளன.

பதவியேற்பு நிகழ்ச்சியில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குடும்ப உறுப்பினர் களுடன் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x