Last Updated : 20 Dec, 2014 11:56 AM

 

Published : 20 Dec 2014 11:56 AM
Last Updated : 20 Dec 2014 11:56 AM

லஷ்கர் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்: உளவுத் துறை எச்சரிக்கை; திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாதிகளை விடுவிப்பதற்காக தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததால் திஹார் சிறைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.

பிரபலமான பலர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருப் பதால் யாரும் எளிதில் நுழைய முடியாத வகையில் இங்கு ஏற்கெனவே 3 அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது.

தற்போது உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இதன் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் இருப்பதாத உள் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, டெல்லி காவல் துறை மிகவும் விழிப்புடன் கண்காணித்து வருகிறது.

இதுகுறித்து டெல்லி டிஐஜி முகேஷ் பிரசாத் கூறியதாவது:

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளதால், திஹார் சிறையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக் கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு விஷயத் திலும் சிறையின் பாதுகாப்பு விஷ யத்திலும் எவ்வித இடையூறுக்கும் இடம் தரமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திஹார் சிறையில் அரசியல் பிரபலங்களும் தீவிரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே சிறையின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இங்கு அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளை விடுவிக்கும் நோக்கில் சிறையை தகர்க்கும் முயற்சி நடைபெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

எனவே சிறைக்குள்ளும் வெளியிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிறரது நடமாட்டங்களை காவல் துறை யினர் விழிப்புடன் கண்காணித்து வருகின்றர் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திஹார் சிறையில் தீவிர வாதிகள் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய திஹார் சிறையில் 6 ஆயிரம் பேரை அடைக்கலாம். ஆனால் இதில் 17 பாகிஸ்தானியர்கள் உட்பட 12 ஆயிரம் பேர் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x