

தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு ரூ.3,500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
தொலைதூர மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவான பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு ரூ.3,500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
79 லட்சம் வாடிக்கையாளர்கள் கம்பியில்லா (டபிள்யூ.எல்.எல்.) தொலைபேசி வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான இணைப்புகள் கிராமப்புறங்களில் வழங்கப்பட்டுள்ளன. எனினும், மின் தடை காரணமாக சேவையில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.