

ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் மக்களவையில் அளித்த பதில்: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய மாட்டோம். நடப்பாண்டு இத்திட்டத்துக்காக ரூ. 34 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு ரூ. 33 ஆயிரம் கோடியாக இருந்தது. இத்திட்டத்தில் மாறுதல் தேவைப்படும் என நினைத்தால் எந்த சமயத்திலும் மாறுதல் செய்வோம்.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி தேவைப்படும்பட்சத்தில் மற்ற துறைகளில் அதே போன்ற பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.