Published : 10 Dec 2014 10:44 AM
Last Updated : 10 Dec 2014 10:44 AM

பொய் வழக்குகளால் சிதையும் திருமண பந்தம்: உச்ச நீதிமன்றம் வேதனை

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498ஏ-வின் கீழ் புகுந்த வீட்டார் மீது பெண்கள் தொடுக்கும் பொய் வழக்குகளால் மாமியார், மாம னார், நாத்தனார் உள்ளிட்டோர் தேவையற்ற வேதனைக்கும் துயரங்களுக்கும் ஆளாகின்றனர் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

“தன்னை கொடுமைப்படுத்துவ தாகவும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாகவும் ஒரு பெண் பொய்புகார் கொடுத்த மறுகணமே புகுந்தவீட்டில் உள்ள வர்கள் 498ஏ-பிரிவின் கீழ் சிறைக் குச் செல்லவேண்டிவருகிறது. தவறு செய்யாதபோதிலும் கணவனின் உடன்பிறந்தோர், வயதான பெற்றோர் சொல்லமுடியாத வேதனையை அனுபவிக்க வேண்டிவருகிறது. கணவனை பழி தீர்ப்பதற்காக அவரது உடன்பிறந்தோர் மீதும் பொய்ப் புகார் அளிப்பது, திருமண உறவையே சீரழிக்கிறது” என்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

“பொய் வழக்குகளில் தமது பெற்றோர் கைது செய்யப்படும் போது ஆத்திரமடையும் கணவன் மீண்டும் தனது மனைவியுடன் வாழ்வதில்லை என்று முடிவு எடுத்துவிடுகிறான். மனைவி கேட்கும் சொத்து கொடுக்கிறேன், பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன். ஆனால் தனக்கு மனைவி தேவையில்லை என்பதில் கணவன் உறுதியாக இருக்கிறான்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

கணவரின் சகோதரர்களுக்கு எதிராக மனைவி தாக்கல் செய்த சாட்சியங்களை ஏற்கமுடியாது என விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட கருத்தை தெரிவித்தது.

சில வழக்குகள் பொய்யாக இருக்கலாம். என்று அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் குறிப் பிட்டபோது, “பெரும்பாலான வழக்குகள் இப்படித்தான் உள்ளன என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்காக தவறு செய்யும் உறவினர்களுக்கு நாங்கள் நற்சான்று தருவதாக கருதக்கூடாது” என்றனர்.

இதையடுத்து 498ஏ-பிரிவை பயன்படுத்தும் பெண்களுக்கு நீதிபதிகள் சில ஆலோசனைகளை தெரிவித்தனர். “இப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும் போது உண்மையாக நடந்துகொள் ளுங்கள். நீங்கள் பாதிக்கப்பட்ட தில் உங்கள் கணவரின் உற வினர்களுக்கு தொடர்பு இல்லாத போது, அவர்களை தேவையின்றி வழக்கில் சேர்க்காதீர்கள். வயதானவர்களையும் தேவை யின்றி வழக்கில் சேர்த்து, உங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ளாதீர்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x