

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, காலில் ஏற்பட்ட காயத்துக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சரத் பவார், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மும்பைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
சரத் பவார் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவருக்கு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனியில் உள்ள அவரை, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.
மகாரஷ்டிரா மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்த சரத் பவார் 1999-ல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்கினார். தற்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.