டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் முதல்வர் வேட்பாளர்கள் யார்? - பாஜக, காங்கிரஸ் தவிப்பு

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் முதல்வர் வேட்பாளர்கள் யார்? - பாஜக, காங்கிரஸ் தவிப்பு
Updated on
1 min read

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல் வர் வேட்பாளராக அர்விந்த் கேஜ்ரிவால் முன்னி றுத்தப்பட்டுள்ளதால், மற்ற கட்சிகளும் முதல்வர் வேட்பா ளர்களை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனினும், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸின் 8 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானவர் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரி வால். தனது 49 நாள் ஆட்சிக்குப் பின் லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் காரணம் காட்டி பிப்ரவரி 14-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு பிப்ரவரி 17 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், ஆம் ஆம் ஆத்மி கட்சி யின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள கேஜ்ரி வால், பாஜகவுடன் நேரடிப் போட்டியில் இருக்கிறார். எனவே, அக்கட்சியை போல் தாமும் முதல்வர் வேட்பாளராக யாரையாவது முன்னிறுத்தினால் தான் போட்டியைச் சமாளிக்க முடியும் என பாஜக கருதுகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பாஜக டெல்லி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “இந்த முறை நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவும். எனவே, முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தவில்லை எனில் தேர்தல் முடிவு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. எனவே, விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்” என் றனர்.

இதேபோல், காங்கிரஸ் கட்சி யிலும் முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்தப் போவ தாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலின்போது 3 கட்சிகளிலும் முதல்வர் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். ஆம் ஆத்மி சார்பில் கேஜ்ரிவாலும் பாஜக சார்பில் ஹர்ஷவர்தனும் தொடர்ந்து மூன்று முறை டெல்லியை ஆட்சி செய்த ஷீலா தீட்சித் காங்கிரஸ் சார்பிலும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். தலைநகர் என்பதால் டெல்லி தேர்தலை பொது மக்கள் ஆவலுடன் கவனித்து வருகின் றனர். எனவே, தேர்தலில் கட்சி களுக்கிடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in