அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தவறுதலாக சுட்டதில் தாய் பரிதாப மரணம்

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தவறுதலாக சுட்டதில் தாய் பரிதாப மரணம்
Updated on
1 min read

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த தன் தாயை நோக்கி, 2 வயது சிறுவன் விளையாட்டாக சுட்டதில் அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

29 வயதான வெரோனிக்கா ஜெ ரெட்லட்ஜ் தனது நான்கு குழந்தைகளுடன், இடாஹோவில் உள்ள வால்மார்ட் ஒன்றில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். இரண்டு வயதான தன் கடைசி குழந்தையை ஷாப்பிங் வண்டியில் உட்கார வைத்துவிட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது, தாயின் கைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுத்த அந்தச் சிறுவன், தெரியாமலேயே இரண்டு முறை சுட்டான். குண்டு பட்ட வேகத்தில் உயிரிழந்தார் வெரோனிக்கா.

11 வயதுக்குட்பட்ட மற்ற மூன்று குழந்தைகளை விசாரித்தும், கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்தும், நடந்த சம்பவத்தை விபத்தாக மட்டுமே கருத முடியும் என அம்மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் இடாஹோவில், அடுத்த மாகாணத்துக்கு வரும்போது ’வெளி மாகாண துப்பாக்கி உரிமம்’ கட்டாயம் தேவை என இடாஹோ அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

சிறு நகரமொன்றில் வசிக்கும் வெரோனிக்கா விடுமுறை நாட்களைக் கழிக்கவே தன் குழந்தைகளுடன் இடாஹோவிற்கு வந்துள்ளார். கிறிஸ்துமஸ் முடிந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்ய அவர் வால்மார்ட்டுக்கு வந்தபோதுதான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in