தற்கொலையில் தமிழகம் முதலிடம்

தற்கொலையில் தமிழகம் முதலிடம்
Updated on
1 min read

இந்தியாவில் தற்கொலை செய்துக் கொள்வோர் அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் (12.5 %) இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மன நல மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதி கூறும்போது, “தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை தண்டிப் பது அவர்களை மேலும் மன உளைச்சல், மனச் சோர்வுக்கு உள்ளாக்கும். இவர்களை சிறையில் அடைத்தால் நோய் அதன் அடுத்த கட்டமான மனச்சிதைவு வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்கொலை எண்ணம் என்பது மன நலம் அடிப்படையிலானது. சிறை ஒருபோதும் தற்கொலை எண்ணத்தைப் போக்காது. எனவே, தற்கொலைக்கு முயற்சிப்பவரை கட்டாயமாக மன நல மருத்துவரிடம் அனுப்பி வைக்க அரசே ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

எட்டு லட்சம் பேர்

உலகம் முழுவதும் ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலகின் மொத்த மரண விகிதத்தில் 1.4 % இது. குறிப்பாக, வறுமையான மற்றும் மத்திய தர நாடுகளில்தான் 75% தற்கொலைகள் நடக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1,35,000 பேர் தற் கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் (12.5 %) இருக்கிறது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரம் (11.9 %), மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கம் (11 %) இருக்கிறது.

கனடா 1972-ம் ஆண்டிலேயே தற்கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றம் என்கிற சட்டப்பிரிவை நீக்கிவிட்டது. ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நார்வே, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி ஒரு குற்றம் என்பதற்கான சட்டமே கிடையாது. மேற்கண்டவற்றில் அப்படி சட்டப்பிரிவு இருந்த சில நாடுகளும் அதனை நீக்கிவிட்டன.

வட கொரியாவில் தற் கொலைக்கு முயற்சிப்பவரை சட்டம் தண்டிப்பது இல்லை; தற்கொலைக்கு தூண்டியவர் கள் என்கிற முறையில் பாதிக் கப்பட்டவரின் காப்பாளர்களாக இருக்கும் உறவினர்களை தண்டிக்க சட்டம் வழி செய்கிறது.

சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந் தில் தற்கொலை மற்றும் தற் கொலை முயற்சி சட்டப்படி குற்றம். ஸ்காட்லாந்தில் நோயுற்று அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்துகொள்வது குற்றம் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in