

சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு, கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தடுக்க, உலக நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
டெல்லியில் அமலாக்கத்துறை மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு, கடத்தல் போன்றவற்றில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும்.
சுதந்திரமான வர்த்தகம் என்பது நியாயமான வர்த்தகத்தால் மட்டுமே சாத்தியப்படும். வரி ஏய்ப்புகளை தடுக்க பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார ஊழல்களை தடுக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனைவரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்" என்றார்.
முன்னதாக ஜி-20 உச்சி மாநாட்டிலும் வரி ஏய்ப்பு, கடத்தல், நிதி முறைகேடுகள் குறித்து இந்தியத் தரப்பில் குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.