

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை இரவு டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சுவாச கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுனர் அரூப் குமார் பாஸு தலைமையிலான குழு அவரது உடல்நிலையை கவனித்து வருகிறது என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஜய் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.