

பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு மேற்கே 28 கி.மீ. தொலைவில் உள்ள விக்ரம் பிளாக்கின் குஸ்வா-காம்பா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரித்விராஜ் சவுகான். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வர் குறை தீர்க்கும் நாளில் சவுகான் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் கடிதத்துடன், 1988-ல் காங்கிரஸ் முதல்வர் பிந்தேஷ்வரி துபே தலைமையிலான அரசில், நிலம் மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருந்த மாஞ்சி போட்ட உத்தரவுக் கடிதமும் இருந்தது. அதாவது ஏழை தலித் சமூகத்தைச் சேர்ந்த சவுகானுக்கு, அரசு நிலம் ஒதுக்குமாறு மாஞ்சி அப்போது உத்தரவு பிறப்பித்துள் ளார். 26 ஆண்டுகள் ஆகியும் அந்த உத்தரவு இன்னும் அமல் படுத்தாமல் உள்ளதாக சவுகான் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பிரித்விராஜ் சவுகான் கூறும் போது, “எனது புகாரைப் பார்த்து அதிர்ந்துபோன முதல்வர், உடனடி யாக எனக்கு நிலம் ஒதுக்கும்படி பாட்னா ஆட்சியருக்கு உத்தரவிட் டுள்ளார். மாநில அமைச்சராக இருந்தபோது அவர் போட்ட உத்தரவை, முதல்வரான பின்பு செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர்க ளாக இருந்த பிந்தேஷ்வரி, பகவத் ஜா, சத்யேந்தர் நாரயண், ஜெகநாத் மிஸ்ரா, லாலு , ராப்ரி தேவி மற்றும் நிதிஷ்குமார் ஆகியோ ருக்கு மனு அனுப்பியும் பலன் கிடைக்கவில்லை” என்றார். மொத்தம் 50 பேருக்கு நிலம் ஒதுக்கும்படி ஜிதன்ராம் மாஞ்சி மாநில அமைச்சராக இருந்தபோது உத்தரவிட்டிருந்தார். அவர்கள் அனைவருக்கும் நிலம் ஒதுக்கப்பட உள்ளது.