Published : 02 Dec 2014 09:41 AM
Last Updated : 02 Dec 2014 09:41 AM

உத்தரப்பிரதேச அரசு அதிகாரி வீட்டில் கைப்பற்றிய வைரங்களின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி: ரூ. 900 கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்

உத்தரப்பிரதேசத்தில் அரசு பொறி யாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனை யில் ரூ. 100 கோடி வைரம், 2 கிலோ தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அவருக்கு 20 இடங்களில் அசையா சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டிலிருந்து 40 போலி நிறுவனங் களுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் மாயா வதி முதல்வராக இருந்த போது, உள்கட்டமைப்புகளின் தலைமைப் பொறியாளராக யாதவ் சிங் பணி யாற்றினார். நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் வழி மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் பொறுப்பில் இருந்தார்.

நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் திட்டங்களில் சுமார் ரூ. 900 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதல் வராகப் பொறுப்பேற்றவுடன் 2012-ம் ஆண்டு யாதவ் சிங் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும், சில மாதங்களி லேயே அதிக அதிகாரங்களுடன் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் நொய்டாவில் உள்ள யாதவ் சிங்கின் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டி லிருந்து ரூ. 100 கோடி மதிப்புள்ள வைரம், 2 கிலோ தங்கம் கைப் பற்றப்பட்டது. அவருடைய காருக் குள் இருந்து ரூ. 12 கோடி அளவுக்கு 8 பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

அவருக்கு சுமார் 20 இடங் களில் அசையா சொத்துகள் இருப்ப தாகக் கூறப்படுகிறது. அந்த இடங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப் பட்டது. இதில், அவரது மனைவி பெயரில் 40 போலி நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இது தவிர, சங்கேத மொழியில் சில தகவல்கள் எழுதப்பட்டுள்ள டைரி ஒன்றும் கிடைத்துள்ளது. அவரின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதைத் தொடர்ந்து யாதவ் சிங்கின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற ஒப்பந்தப்பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் மிகவும் அடிமட்ட பணிக்கு மாற்றப் பட்டு விசாரணைகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.

“எந்தத் துறையிலாவது தவறு நடப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x