தாஜ்மஹால் இருக்கும் நிலம் இந்து மத மன்னரிடமிருந்து வாங்கப்பட்டது: உ.பி. பாஜக தலைவர்

தாஜ்மஹால் இருக்கும் நிலம் இந்து மத மன்னரிடமிருந்து வாங்கப்பட்டது: உ.பி. பாஜக தலைவர்
Updated on
1 min read

தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் நிலத்தை இந்து மதத்தைச் சேர்ந்த மன்னர் ஜெய் சிங்கிடமிருந்து ஷாஜகான் வாங்கியதாக உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாயி கூறியுள்ளார்.

மும்தாஜின் நினைவிடமான தாஜ் மஹால் உலக அதிசயத்தின் ஒன்றாக திகழ்ந்து மிகப் பெரிய வருவாயை ஈட்டும் தரும் நிலையில், அதனை வக்பு வாரியத்திடம் ஒப்படைத்து முஸ்லிம்களின் கல்விக்காக அந்த பணம் செலவிடப்பட மத்திய அரசு வழி செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அசாம் கான் கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக இதனை பாஜ்பாயி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், " தேஜோ மகாலியா எனப்படும் சிவன் கோயில் இருந்த நிலத்தின் ஒரு பகுதியில் தான் தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ளது.

அந்த நிலத்தை இந்து மதத்தைச் சேர்ந்த மன்னர் ஜெய் சிங்கிடம் முகாலிய மன்னர் ஷாஜகான் தனது மனைவிக்கான மாளிகையை கட்ட விலைக்கு வாங்கினார். இதனை நான் காற்றில் சொன்ன கதையாக கூறவில்லை.

இதற்கான பத்திர ஆதாரம் உள்ளது. ஏற்கனவே வக்பு வாரியத்தின் கீழ் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் தாஜ் மஹாலை எப்படி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in