Published : 07 Dec 2014 10:42 AM
Last Updated : 07 Dec 2014 10:42 AM

கேரளாவில் விபத்தில் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெகதிக்கு ரூ.5.9 கோடி இழப்பீடு

விபத்தில் பாதிக்கப்பட்ட மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருக்கு (63) ரூ.5 கோடியே 90 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். 63 வய தாகும் அவர் இதுவரை 1100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளார். இதற்காக கின்னஸ் புத்த கத்திலும் இடம்பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டில் மட்டும் 70 மலை யாள படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2012 மார்ச் 10-ம் தேதி படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது கோழிக்கோடு அருகே நடந்த கார் விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.

முதலில் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். சுமார் ஓராண்டு காலம் வேலூர் மருத்துவமனையில் தங்கி யிருந்து சிகிச்சை பெற்ற அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருவனந்த புரத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். விபத்தின் பாதிப்பு களில் இருந்து இன்னமும் முழுமை யாக மீளாத அவர் வீல்சேரில் இருந்தபடி இருந்தபடி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீகுமாருக்கு ஏற்பட்ட விபத் துக்கு ரூ.13 கோடி இழப்பீடு கோரி கடந்த 2013 ஏப்ரலில் மோட்டார் வாகன விபத்து முறையீட்டு தீர்ப்பாயத்தில் அவரது மனைவி ஷோபா வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான தீர்ப்பாய விசாரணையில் இன்சூரன்ஸ் நிறு வனத்துக்கும் ஸ்ரீகுமார் தரப்புக்கும் இடையே நீண்ட வாதம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருவனந்த புரத்தில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற மெகா லோக் அதாலத்தில் இருதரப்புக்கும் இடையே சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதன்படி ஜெகதி ஸ்ரீகுமாருக்கு ரூ.5 கோடியே 90 லட்சத்தை இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதில் ரூ.2.50 கோடி ரொக்கமாக அவரிடம் வழங்கப்பட்டது. மீத முள்ள தொகை வங்கியில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப் பட்டு அதில் கிடைக்கும் வட்டியை 3 மாதங்களுக்கு ஒருமுறை அவரிடம் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஜெகதி ஸ்ரீகுமாரின் வருமானத்தைக் கணக்கிட்டு அவருக்கான இழப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x