

காப்பீடு, நிலக்கரித் துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
காப்பீடு துறையில் தற் போதுள்ள 26 சதவீத அந்நிய முதலீட்டை, 49 சதவீதமாக உயர்த் துவது தொடர்பான மசோதாவும், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டுள்ள நிலக்கரிச் சுரங்கங்க ளுக்கு மீண்டும் டெண்டர் விடுவது தொடர்பான மசோதாவும் நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப் படும் என்று மத்திய அரசு அறிவித் திருந்தது.
மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள போதிலும், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மாநிலங்களவையில் பணிகள் பாதிக்கப்பட்டு, இந்த இரு மசோதாக்களும் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அவசரச் சட்டம் மூலம் இந்த இரண்டு சட்டங்களையும் அமல்படுத்த முயற்சி மேற்கொள் ளப்படுமா என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவிடம் செய்தி யாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நேற்று கூறும்போது, “இந்த 2 மசோதாக் களையும் நிறைவேற்றுவதற்கான அனைத்து வழிவகைகளையும் மத்திய அரசு பரிசீலிக்கும். வெளி நாட்டு காப்பீடு நிறுவனங்களின் திறனையும், நிபுணத்துவத்தையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காப்பீடு துறையில் நமது நாட்டுக்கு அதிக முதலீடு தேவை. எனவே, அந்த மசோதாக் களை நிறைவேற்ற கட்டாயம் முயற்சிப்போம்” என்று தெரி வித்தார்.
கடந்த சனிக்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்று வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் அமளியால், இத்தகைய சீர்திருத்த மசோதாக் களை நிறைவேற்ற முடியாமல் போவதை ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம்” என்று தெரி வித்திருந்தார்.