Published : 11 Dec 2014 10:02 AM
Last Updated : 11 Dec 2014 10:02 AM

சமத்துவமான, நீடித்த மொழிக் கொள்கை: கனிமொழி வலியுறுத்தல்

குறுகிய கண்ணோட்டத்துடன் சம்ஸ்கிருத மொழியை திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு சமத்துவ மான, நீடித்திருக்கக்கூடிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என மாநிலங்கள வையில் நேற்று திமுக அவைத் தலைவர் கனிமொழி வலியுறுத்தி னார்.

மாநிலங்களவையில் மொழிக் கொள்கை தொடர்பாக பிரச்சினை எழுப்பி கனிமொழி பேசியதாவது:

கடந்த ஜூலை மாதம் சிபிஎஸ்இ பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ‘ஆசிரியர் தினத்தின்’ பெயரை ‘குரு உத்சவ்’ என்று மாற்றி உத்தர விட்டது.

இறுதியாக இப்போது கல்வி யாண்டின் மத்தியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்கு பதிலாக சம்ஸ்கிருதம் மூன்றாவது மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் ஒரு மொழியைத் திணிக்கும் முயற்சி ஆகும்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கேட்டபோது, அரசு இந்த ஆண்டு சம்ஸ்கிருத மொழி தேர்வு இருக்காது என்றும் ஜெர்மன் மொழி கற்க விரும்பும் மாணவர்கள் கூடுதல் மொழியாகக் கற்கலாம் என்றும் கூறியுள்ளது. அதாவது சம்ஸ்கிருதம் கற்பது கட்டாயம், வேறு மொழி கற்க விரும்பினால் கூடுதல் பளு சுமத்தப்படும் என்பது இதன் பொருளாகிறது.

1986-ம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழி கொள்கை, 2005-ம் ஆண்டின் தேசிய பாடத்திட்டம் ஆகியவற்றின்படி இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் நியாயப்படுத்துகிறார். ஆனாலும் மும்மொழிக் கொள்கை என்பது பல மொழிகளை மேம்படுத்து தல், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது ஆகும். அதன்படி, இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக ஒரு தென்னிந்திய மொழி கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய கல்விக் கொள்கையின்படி இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழி ஏன் கற்பிக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ் கிருதத்தை கட்டாயமாக்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள் கையை அரசு முறியடிக்கிறது. உலகமயமான இன்றைய காலத்தில் நமது மாணவர்கள் பல மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.

ஒரு மொழியைத் திணிப்பதைக் காட்டிலும் அரசு பல இந்திய, அயல்நாட்டு மொழிகளைக் கற்க ஊக்கம் அளிக்கவேண்டும். எனவே அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்து சமத்துவமான, நீடித்திருக்கக்கூடிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x