

விஷத்தை உமிழ்வது காங்கிரஸ் கட்சிதான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம், குல்பர்கா வில் கடந்த சனிக்கிழமை நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “ஆட்சியை கைப்பற்றுவதற் காக மதச்சார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கையில்லாதவர்கள் விஷ விதையை விதைக்கின்றனர். அவர் களை மக்கள் வெற்றி பெற விட மாட்டார்கள்” எனறு பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதற்கு பதிலடியாக உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், அக் கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசியதாவது:
“அதிகாரம் என்பது விஷத்தைப் போன்றது என்று ராகுலிடம் சோனியா காந்தி கூறியிருந்தாராம். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் யார்? யாருடைய வயிற்றுக்குள் இந்த விஷம் சென்றுள்ளது? யார் அந்த விஷத்தை விதைத்து அறுவடை செய்கிறார்கள்? விஷத்தை விதைத்ததும், அதை உமிழ்வதும் காங்கிரஸ் கட்சிதான்.
முக்கிய பிரச்சினைகள் தொடர் பாக காங்கிரஸ் கட்சியின் பதிலை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவர்களின் பதில்களோ சம்பந்தமேயில்லாமல் உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய் வதற்கான காரணம் என்ன வென்று மக்கள் கேட்டால், விஷத்தை விதைப்பவர் கள் பற்றி சோனியா காந்தி பேசி வருகிறார்.
குஜராத்தை கலவரமற்ற மாநில மாக மாற்றியிருக்கிறேன். மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேசத்திலும் கலவரமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவேன்.
மாநிலங்களுக்கிடையேயும், சமூகங்களுக்கிடை யேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல் படுகிறது. தெலங் கானா விவகாரத்தை காங்கிரஸ் சரியாக கையாளாததால், ஆந்திரப் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. விஷ விதையை விதைத்து, நாட்டை காங் கிரஸ் கட்சி அழித்து வருகிறது.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது எந்தவிதமான எதிர்ப் பும் இல்லை.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை.
ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் உலக அளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது” என்றார் நரேந்திர மோடி.