சாரதா நிதி நிறுவன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சர் கைது

சாரதா நிதி நிறுவன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சர் கைது
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

சாரதா நிதி நிறுவனம், பொன்ஸி திட்டம் என்ற பெயரில் அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இம்முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மதன் மித்ரா மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிபிஐயால் கைது செய்யப் பட்டார். குற்றச் சதி, ஏமாற்றுதல், நிதி முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதன் மித்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மதன் மித்ராவிடம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரி கள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சாரதா குழுமத்தின் சட்ட ஆலோ சகர் நரேஷ் பலோடியா என்பவரை யும் சிபிஐ கைது செய்துள்ளது. ஏற்கெனவே இவ்வழக்கில் திரிண மூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குணால் கோஷ், சிரிஞ்செய் போஸ் ஆகி யோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பழிவாங்கல்

-பிடிஐ

இதனிடையே, “மதன் மித்ரா வின் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்பட் டுள்ளது. பாஜக அரசியல் பழிவாங் கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள் ளது. மாநில கேபினட் அமைச்சரைக் கைது செய்வதை அரசுக்கும், பேரவைத் தலைவருக்கும் மறைத்தது ஏன்?” என மேற்கு வங்க பொது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in