நல்லாட்சி தினத்தை கிறிஸ்துவர்கள் வரவேற்பர்: ரவிசங்கர் பிரசாத்

நல்லாட்சி தினத்தை கிறிஸ்துவர்கள் வரவேற்பர்: ரவிசங்கர் பிரசாத்
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் தினத்தன்று நல்லாட்சி தினம் கடைபிடிப்பதை கிறிஸ்துவர்களே வரவேற்பார்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று நல்லாட்சி தினம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "நல்லாட்சி இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் என அனைவருக்கும் நன்மை செய்யும். எனவே கிறிஸ்துவர்களே நல்லாட்சி தினத்தை டிசம்பர் 25-ல் கடைபிடிப்பதை வரவேற்பர்" என கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டுவரும் மதமாற்ற பிரச்சாரங்கள், பாஜக அமைச்சர்கள் சிலர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துகள் என பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் வளர்ச்சியும், மோடியின் பாதையும் நல்லாட்சி என்றால் என்னவென்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பிரதமர் பொதுமேடைகளில் அதிகமாக பேசும்போதும், நாடாளுமன்றத்தில் மவுனம் காப்பது ஏன் என்ற கேள்விக்கு, "பிரதமர் எல்லா இடங்களிலும் பேசுகிறார்" என்றார்.

இந்துத்துவா அமைப்புகளின் மதமாற்ற கொள்கையை கண்டித்து மோடி கருத்து கூறாதது ஏன் என்ற கேள்விக்கு, "இதற்கு தீர்வு விரைவில் எட்டப்படும்" என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in