காஷ்மீர் முதல்வர் முப்தி?

காஷ்மீர் முதல்வர் முப்தி?
Updated on
1 min read

காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்தக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார். அனந்த்நாக் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது தலைமையில் புதிய ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் நாங்கள் அவசரப்பட மாட்டோம். புதிய அரசு ஸ்திரமான அரசாக அமைய வேண்டும். காஷ்மீர் மக்களின் நலன் கருதி முடிவெடுப்போம் என்று தெரி வித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார். மாநிலத்தில் நல்லாட்சி அமைய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in