அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி
Updated on
1 min read

அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்படைத்த அக்னி-4 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி அக்னி-4 ஏவுகணை முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2012, 2014 ஜனவரியில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து நான்காவது முறையாக ஒடிஸா மாநிலம் வீலர் தீவில் நேற்று அக்னி-4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் ரவி குப்தா கூறியபோது, காலை 10.19 மணிக்கு அக்னி-4 ஏவுகணையை செலுத்தினோம். 3500 கி.மீட்டர் தொலைவு சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என்று தெரிவித்தார்.

தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி-4 ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது ஆகும். 20 மீட்டர் நீளம் 17 டன் எடை உடைய இந்த ஏவுகணை 900 கீ.மீட்டர் உயரத்தில் 4000 கி.மீட்டர் தொலைவுக்கு பாயும் திறன் கொண்டதாகும்.

இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் ஏற்கனவே சேர்க் கப்பட்டுவிட்டது. 2015 தொடக்கம் முதல் ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையில் ஏவுகணை கள் உற்பத்தி செய்யப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு தெரி வித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in