

கோழிக்கோட்டில் இன்று முத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அன்பின் முத்தம் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கேரள மாநில விடுதியொன்றில் முத்தமிட்ட காதலர்கள் மீது தாக்கு தல் நடத்தப்பட்டதைக் கண்டித்து கடந்த நவம்பர் 2-ம் தேதி ‘அன்பின் முத்தம்’ என்ற பெயரில் கொச்சியில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பலதரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
தற்போது, ‘தெருவில் முத்தம்’ என்ற பெயரில் கோழிக் கோட்டில் இன்று முத்தப் போராட்டம் நடத்தப்போவதாக குறும் பட இயக்குநரும், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியரு மான ராகுல் பசுபாலன் அறிவித் துள்ளார்.
இன்று மதியம் 3 மணியளவில் கோழிக்கோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் முத்தப் போராட்டம் நடைபெறும். இதில் 1,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ராகுல் பசுபாலன் கூறியுள்ளார்.