Published : 29 Dec 2014 10:25 AM
Last Updated : 29 Dec 2014 10:25 AM

பயன்பாட்டுக்கு யாத்ரி நிவாஸ் நாளை திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் விடுதி நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இது சம்பந்தமாக சென்னை யிலுள்ள இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீரங்கத்தில் 1,000 பயணிகள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் என்னும் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் தங்கும் அறை, உணவு விடுதி என பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதி கட்டிடத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தார்.

இந்த தங்கும் விடுதியைக்கட்ட தமிழக அரசு ரூ.48 கோடி நிதி ஒதுக்கியது. இந்த தங்கும் விடுதி, வரும் 30-ம் தேதி முதல் பக்தர்களின் முழுப்பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்த தங்குமிடத்தில் 24 ஏ.சி காட்டேஜ்கள் உள்ளன. இவற்றின் ஒருநாள் வாடகை ரூ.1,750 ஆகும். மேலும் இரண்டு படுக்கைகளை கொண்ட 96 ஏ.சி அறைகளில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.750 வசூலிக்கப்படும். இதுவே, ஏ.சி வசதியில்லாத அறை என்றால் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக 600 படுக்கைகள் கொண்ட விஸ்தாரமான ஓய்வறையும் உள்ளது. இதில் தங்க ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x