இந்திய - ரஷ்ய உறவு மேம்பட புதின் வருகை உதவும்: மோடி

இந்திய - ரஷ்ய உறவு மேம்பட புதின் வருகை உதவும்: மோடி
Updated on
1 min read

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினின் வருகை, இரு நாட்டின் உறவையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துகிறார். இவர்களின் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

ரஷ்ய அதிபர் புதினின் வருகையை குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "புதின் வருகை இந்தியா - ரஷ்யா இடையே ஆன உறவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்லும்" என்று கூறினார்.

இதனிடையே, டெல்லி வந்தடைவதற்கு முன்னர் ரஷ்ய அதிபர் புதின் பி.டி.ஐ. செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமது இந்திய பயணத்தில் பல முக்கிய, அர்த்தமுள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in