

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போதுவரை ரூ.141.64 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் கடந்த 41 நாட்களில், கோயிலுக்கு ரூ.141.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் வந்த வருவாயை (ரூ.127.62 கோடி) விட ரூ. 14 கோடி அதிகமாகும்.
இதில், உண்டியல் மூலம் ரூ. 51.17 கோடி வருவாய் கிடைத்துள்ளது (கடந்த ஆண்டு ரூ. 47.29 கோடி), அரவண பிரசாதம் விற்பனையின் மூலம் ரூ. 54.31 கோடி (கடந்த ஆண்டு ரூ.50.38 கோடி), அப்பம் விற்பனையின் மூலம் ரூ. 10.32 கோடி (கடந்த ஆண்டு ரூ.9.77 கோடி) வருமானம் கிடைத்துள்ளது.- பிடிஐ