கோட்சே கோயிலுக்கு பூமி பூஜை நடத்திய இந்து மகாசபை

கோட்சே கோயிலுக்கு பூமி பூஜை நடத்திய இந்து மகாசபை
Updated on
1 min read

மீரட்டில் நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்டும் முயற்சியில் முதல் கட்டமாக இந்து மகாசபை பூமி பூஜை செய்துள்ளனர் என்ற செய்திகளை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீரட்டில் உள்ள சாரதா சாலையில் பூமி பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய இந்து மகாசபை தேசியப் பொதுச் செயலர் ஆச்சார்ய மதன், நாதுராம் கோட்சேயை புகழ்ந்து பேசியதாகவும், அவரே நாட்டின் உண்மையான பற்றாளர் என்றும், ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சாடியதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் மதமாற்றத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இந்து மகாசபையினர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட் (பொறுப்பு) நவ்நீத் சிங் சாஹல் செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகுவதாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உண்மை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பூமி பூஜை விவகாரம் குறித்து உள்ளூர் உளவுத்துறை அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு, மற்றும் அமைதியை சீர்குலைக்க ஒருவருக்கும் உரிமை இல்லை எனவே கடும் நடவடிக்கை உறுதி என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in