

உபேர் கால் டாக்ஸியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் சிவகுமார் யாதவ் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.
டெல்லி கீழமை நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் குற்றவாளியை திகார் சிறைக்கு அனுப்பி வைத்தது. அங்கு 10-ம் வார்டில் 18-ம் எண் சிறையில் சிவ குமார் யாதவ் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு எந்த அசம்பாவிதமும் நிகழாத விதத்தில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட் டுள்ளது. அவருடன் சிறையில் மேலும் மூவர் உள்ளனர். சிறையில் அவருடைய நடத்தை இயல்பானதாகவே உள்ளது.சந்தேகப்படும்படியாக எந்த மாற்றமும் இல்லை" என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.