

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மும்பைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
சரத் பவார் காலிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்காக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது மனைவி பிரதீபாவும், மகள் சுப்ரியாவும் சென்றுள்ளனர்.
மகாரஷ்டிரா மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்த சரத் பவார் 1999-ல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்கினார். தற்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.