எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை: கைதான மேக்தியின் பெற்றோர் பேட்டி; ட்விட்டர் கணக்கு திருடப்பட்டதாகப் புகார்

எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை: கைதான மேக்தியின் பெற்றோர் பேட்டி; ட்விட்டர் கணக்கு திருடப்பட்டதாகப் புகார்
Updated on
1 min read

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதாகியுள்ள எங்கள் மகன் மேக்தி அப்பாவி. அந்த அமைப்புக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. மேக்தியின் இமெயில்,ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் சமூகவலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஆள் சேர்த்ததாகவும் பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேக்தியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, உளவுத்துறை மற்றும் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மேக்தி மெஸ்ரூர் பிஸ்வாஸின் உண்மைநிலைக் குறித்து அறிவதற்காக அவரது தந்தை மேகெயில் பிஸ்வாஸ், தாய் மும்தாஜ் பேகம் ஆகி யோரை 'தி இந்து' சார்பாக சந்தித்தோம்.

அவர்கள் கூறியதாவது:

எங்கள் மகன் மேக்தி அப்பாவி. அவனுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அவ‌னை தீவிரவாதி போல சித்தரித்து போலீஸார் எங்களை மிரட்டி விசாரிக்கின்றனர். அவனுடைய ட்விட்டர், மின்னஞ்சல், பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரிக்குமாறு தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

தற்போது எனது மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை. ட்விட்டரில் ஆதரவாக மட்டுமே செயல்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேக்தியை தீவிரவாதி போல் நாட்டுக்கு எதிராக போர்த்தொடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்தது ஏன்?

தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பது சட்டப்படி குற்றமல்ல என நீதிமன்றங்கள் பல தீர்ப்பு களில் கூறியுள்ளன. மேக்தி மீது இத்தனை வழக்குகள் நியாயமா? இவ்வாறு, அவர்கள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in