ஏழுமலையானை தரிசிக்க கலாச்சார உடை கட்டாயமாகிறது

ஏழுமலையானை தரிசிக்க கலாச்சார உடை கட்டாயமாகிறது
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் கலாச்சார உடையணிந்து வர வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை நாடு முழுவதும் மட்டுமன்றி பல வெளிநாட்டு பக்தர்களும் தரிசித்து வருகின்றனர். தினமும் சராசரியாக 65 முதல் 70 ஆயிரம் பேர் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர். கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் மட்டுமே கலாச்சார உடை அணிந்து சேவையில் கலந்துகொண்டு வருகின்றனர். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ. 300 சிறப்பு தரிசனம், ரூ.50 சுதர்சன டோக்கன் கட்டணத்தில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் கலாச்சார உடை கட்டாயமாக்கப்பட்டது.

சர்வ தரிசனம் மற்றும் நடைபயணமாக மலையேறி வரும் பக்தர்கள் மட்டுமே கலாச்சார உடையான வேட்டி, சேலை போன்றவை அணிவது கட்டாயமாக்கப்பட வில்லை. தற்போது இவர்களும் முழுமையாக கலாச்சார உடையில் வரவேண்டும் என தேவஸ்தானம் விரும்புகிறது. அதன்படி ஆண்கள் வேட்டி, துண்டு, சட்டையும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வந்தால் மட்டுமே தரிசன அனுமதி வழங்க வேண்டும் என நிர்ணயித்துள்ளனர். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in