

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்தவர் சந்திரமவுலி (45). கோழி விற்பனை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் ஆரம் பாக்கத்தில் பணம் வசூலித்துக் கொண்டு சூலூர்பேட்டைக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந் தார். அப்போது பத்தலபாளையம் என்ற இடத்தில், பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் சந்திரமவுலியை கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதில் சந்திரமவுலிக்கு கழுத்து, கை, தோள் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. சந்திரமவுலியின் அலறல் கேட்டு அவ்வழியே சென்ற வர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். இதையடுத்து அக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
இந்நிலையில் வயிற்றில் பாய்ந்த கத்தியுடன் சந்திரமவுலி, தனது பைக்கை ஓட்டியபடி தடா வரை 4 கி.மீ. சென்றார். அங்கு ஒரு கோழிப்பண்ணை அதிபரிடம் நடந்த விஷயங்களை கூறி, மயங்கி விழுந்து விட்டார்.
உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். வரதய்ய பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.