Last Updated : 23 Dec, 2014 10:21 AM

 

Published : 23 Dec 2014 10:21 AM
Last Updated : 23 Dec 2014 10:21 AM

ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதுகாப்பு பணியில் தன்னார்வலர்கள்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாது காப்பு பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் 11 ஆயிரத்துக் கும் மேற்பட்ட ஆளில்லா ரயில்வே கிராஸிங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தன்னார்வலர்களை வழங்குமாறு தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக அரசியல் அமைப்புகளை கேட்டுக்கொள்ளும் வகையில் விளம்பரம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை ரயில்வே விபத்துகளில் 18,735 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வடக்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் சுமார் 5000 பேர் இறந்துள்ளனர். ரயில்பாதை விபத்துகளை குறைக்க ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அவர்களின் உதவியும் கோரப்படும்.

ஆளில்லா ரயில்வே கிராஸிங்களில் ஊர்க்காவல் படையை ஈடுபடுத்துவது குறித்தும் ஆராயப்படும். நிதிப் பற்றாக்குறை காரணமாக இவை அனைத்திலும் ரயில்வே துறை சார்பில் பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. இதற்காக வருவாய் ஆதாரங்களை பெருக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் பாதை விபத்துகளை தடுக்க, ரயில் பாதையை ஒட்டி சுற்றுச்சுவர், முள்வேலி அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் பொருத்துதல், தொடர் அறிவிப்பு செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப்புக் காக, கதோக்கர் குழுவின் பரிந் துரைகளை அமல்படுத்த நட வடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பரிந்துரைகளும், நிலுவையில் உள்ள திட்டங்களும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் நிறைவேற்றப் படும். ரயில்பாதை அருகில் யாரேனும் காயமுற்று கிடந்தால் அவருக்கு முதலுதவி செய்வது, மருத்துவ உதவி கோருவது, அருகில் உள்ள காவல்துறை அல்லது ரயில்நிலைய அதிகாரிக்கு தகவல் கூறுவது ஒவ்வொரு ரயில்வே ஊழியரின் கடமை ஆக்கப்பட்டுள்ளது” என்றார்.

துணைக் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர், “ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மருத்துவமனை அமைப்பது சாத்தியமில்லை. என்றாலும் காய முற்றவர்களுக்கு நிலைய கண் காணிப்பு அதிகாரி மூலம் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப் படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x