

இமயமலைப் பகுதிக்கு, அதன் அமைப்பிட முக்கியத்துவம் கருதி சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
அருணாசலப் பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள டவாங் நகரில், ‘இமயமலைப் பகுதி எதிர் கொள்ளும் சவால்கள் (கல்வி, சுகா தாரம், கலாச்சாரம்)’ என்ற தலைப் பில் சர்வதேச மாநாடு மற்றும் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கிரண் ரஜிஜு பங்கேற்று மேலும் பேசியதாவது:
கால மாற்றத்தில் இருந்து இப் பகுதியின் கலாச்சாரம், பாரம் பரியத்தை காக்க வேண்டியது அவசியம். எல்லைப் பகுதிகளில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதே முன்னுரிமைப் பணியாக இருக்கும். சிறந்த போக்குவரத்து வசதி இல்லாவிட்டால் எந்தப் பகுதியிலும் முன்னேற்றம் இருக்காது.
மத்திய துணை ராணுவப் படை களுக்கான ஆட்கள் தேர்வில் வட கிழக்கு மற்றும் லடாக் பகுதி இளைஞர்களுக்கு சிறப்பு சலுகை கள் வழங்குவது குறித்து அந்தந்த படைகளின் தலைமை இயக்குநர்களிடம் பேசியுள்ளேன்.
கல்வியறிவு இல்லாவிடில் மத நம்பிக்கை முழுமை பெறாது. நமது மதத்தில் நாம் நம்பிக்கை வைப்பது அவசியம். இந்த நம்பிக்கை நமது சமூக வளர்ச்சிக்கான கருவியாக இருக்க வேண்டும். நமக்கு வழிபாட்டுத் தலங்கள் அவசியம். இவற்றுடன் தரமான கல்வி, மருத்துவ வசதிகளும் முக்கியம்.
இமயமலைப் பகுதி மக்களின் நலன் கருதி அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். அரசியல் சாசனத்தில் 8-வது அட்டவனையில் ‘போட்டி’ மொழியை சேர்க்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரி வருவதை அறிவேன். ஆனால் இந்த அட்ட வனையில் ஒரு மொழியை சேர்க்க வேண்டுமெனில், அதற்கென சில வழிகாட்டு நெறிகள் உள்ளன” என்றார் அமைச்சர்.