

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இதனை அமலுக்கு கொண்டுவருவதற்கு உள்ள தடைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் அருண் ஜேட்லி ஆலோசிப்பார் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பின்னர் இதனை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.