Published : 25 Dec 2014 05:22 PM
Last Updated : 25 Dec 2014 05:22 PM

ஒற்றுமையை உணர்த்தும் ஓம்காரேஸ்வரர் தரிசனம்

குன்றுகள் அனைத்திலும் சிவபெருமானும் அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை கர்நாடக மாநில எல்லைக்கு உட்பட்ட பெங்களூர் ஓம்காரமலை நமக்கு உணர்த்துகிறது.

பெங்களூருவின் வடபாகமாக உள்ள கெங்கேரியிலிருந்து உத்தர ஹன்னி சாலையில் உள்ள ஸ்ரீநிவாசபுராவில், சுமார் 60அடி உயரத்தில் உள்ள மலைபாகத்தில் எப்போதும் ‘ஓம்நமசிவாய’ என்னும் மந்திர ஒலி கேட்டுக்கொண்டு இருக்கிறது.

ஓம்கார மலை என்று அழைக்கப்படுகிற இந்த மலை உச்சியிலிருந்து பெங்களூருவின் நகரப் பகுதி அனைத்தையும் நாம் தெளிவாகப் பார்க்க முடியும். பாரத தேசத்தில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில் அதே வடிவத்தில் தத்ரூபமாக பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று விரும்பிய சிவபுரி மகா சுவாமிகள்தான் இத்தலத்தை நிறுவப் பணித்தவர். இதைக் கேட்டு மதுசூதனானந்த புரி சுவாமிகள்தான் இந்த ஆலயத்தைக் கட்டினார்.

ஓம்கார மலை என்று அழைக்கப்படுகிற இந்த மலை உச்சியிலிருந்து பெங்களூருவின் நகரப் பகுதி அனைத்தையும் நாம் தெளிவாகப் பார்க்க முடியும். பாரத தேசத்தில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில் அதே வடிவத்தில் தத்ரூபமாக பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீசிவபுரி மகா சுவாமிகள்தான் இத்தலத்தை நிறுவப் பணித்தவர். இதைக் கேட்டு மதுசூதனானந்த புரி சுவாமிகள்தான் இந்த ஆலயத்தைக் கட்டினார்.

1008 சின்ன சிவ லிங்கங்கள்

சைவ சமயத்தின் பெருமையை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தில் அவர்கள் மனதைத் திருப்பிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே இங்கே பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் 12 கருவறைகளில் அமைந்து, அவற்றிற்கு அமைக்கப்பட்ட சுற்றுச் சுவர்களில் மொத்தம் 1008 சிறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்ற ஆலய வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.

ஒற்றுமை கூறும் விமானங்கள்

மதம் மற்றும் இனத்தால் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்ற கருத்தை இங்கு கட்டப்பட்டுள்ள இரண்டு கோபுர விமானப்பகுதிகள் எடுத்துக் கூறுவது மிக வித்தியாசமாக உள்ளது. மூலஸ்தானத்தில் ஓம்காரேஸ்வரர் என்ற சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ராஜகோபுரத்தை முன்பகுதியிலும் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுன சுவாமியின் ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானத்தைப் பின்பகுதியிலும் ஒட்டியபடி அமைத்துக் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு வந்தனம்

முதலில் குருவந்தனம் செய்ய வேண்டும் என்ற தரிசன விதிப்படி ஸ்ரீவித்யா கணபதி ஆலய முகப்பின் வலது பாகத்தில் காட்சி தருகிறார். இடது பாகத்தில் பாலமுருகன் நின்ற கோலத்தில் அருள்கிறார். இளம் வயதில் இறைபக்தி, வீரம், நேர்மை வேண்டும் என்பதை உணர்தல் அவசியம்.

மனித வாழ்க்கையின் முன்னேற்றப் படிகளை 11 ஆகக் கருதி அமைத்து அவற்றைக் கடந்து செல்லும் போது, மேல் பாகத்தில் வலது ஓரத்தில் ஸ்ரீ கால பைரவ மூர்த்தத்தை தரிசிக்கலாம். ஈஸ்வரனே காலபைரவ வடிவில் காவல்தெய்வம் வடிவில் நிற்கிறார் என்றும், எமது எல்லைக்குள் வந்திருக்கும் உங்களை துர்சக்திகள் நெருங்குவது இயலாது என்று சொல்வதை உணர்வோம்.

மனிதனுக்கு அன்பான மனமே வேண்டும் என்பதை உணர்த்தி விலங்கு மனம் கூடாது என்று அறிவுறுத்தி மனதில் மண்டிக் கிடக்கிற கோபம், உலோபம், மத மாச்சரியங்களைப் பலியிட பீடம் இருக்கிறது என்று சிவசக்தி சூலம் நிறுத்தி அருகில் பலிபீடமும் நந்திதேவரும் வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார்கள். எதிர் புறத்தில் மச்சாவதாரியான விஷ்ணு மூர்த்தி காட்சி தருகிறார். ஆசைக் கடலில் தத்தளித்து ஆபத்துகளின் நடுவே வாழாமல் இறை துணை நாடு என்று சொல்கிறது. இங்கே மகாவிஷ்ணு மத்ஸ்ய நாராயண மூர்த்தி என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.

திருச்சுற்றில் ஸ்ரீ சண்டிகேஸ்வரரை தியான ரூபத்தில் வைத்து சிவத்தியானம் அனைவருக்கும் அமைதியான வாழ்வைத் தரும் என்று கூறி தொடர்ந்து சிவலிங்கத் திருமேனிகளை தரிசிக்கும்படி சிவப்பொக்கிஷமாகக் காட்டி இருப்பது சிறப்பு.

துவாதச லிங்கத் திருமேனி தரிசனம்

பன்னிரண்டு லிங்கங்களும் ஓம்கார நாதேஸ்வரர் நடுவில் மிகப் பெரிய பாணலிங்க வடிவில் திரிசூலம் உடுக்கையோடு நாகாபரணத்துடன் ருத்திராட்ச மாலை மற்றும் வில்வ மாலையுடன் காட்சி தருகிறார். 1008 சிறுலிங்கங்களுடன் கருவறைக் கோஷ்டங்கள் வடிவமைக்கப்பட்டாலும், நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட 13,000 சிவலிங்கங்கள் ஆலயக் கட்டுமானப் பணியின்போது கற்களுக்கு இடையே வைக்கப்பட்டுள்ளன.

மற்ற பதினோரு வகையான லிங்கங்களுக்குள் அரியவகை பாஷாணங்கள், கந்த மூலிகைகள், நவரத்தினக் கற்கள், தரமான பாதரசக் கற்கள் பூஜை செய்து கொண்டுவரப்பட்டு, பாரத நதிகளின் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து அவை சக்திவாய்ந்த யந்திர ஸ்தாபனம் செய்யும் காலத்தில் ஆதார பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பன்னிரண்டு லிங்கங்களும் ஓம்கார நாதேஸ்வரர் நடுவில் மிகப் பெரிய பாணலிங்க வடிவில் திரிசூலம் உடுக்கையோடு நாகாபரணத்துடன் ருத்திராட்ச மாலை மற்றும் வில்வ மாலையுடன் காட்சி தருகிறார். 1008 சிறுலிங்கங்களுடன் கருவறைக் கோஷ்டங்கள் வடிவமைக்கப்பட்டாலும், நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட 13,000 சிவலிங்கங்கள் ஆலயக் கட்டுமானப் பணியின்போது கற்களுக்கு இடையே வைக்கப்பட்டுள்ளன.

மற்ற பதினோரு வகையான லிங்கங்களுக்குள் அரியவகை பாஷாணங்கள், கந்த மூலிகைகள், நவரத்தினக் கற்கள், தரமான பாதரசக் கற்கள் பூஜை செய்து கொண்டுவரப்பட்டு, பாரத நதிகளின் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து அவை சக்திவாய்ந்த யந்திர ஸ்தாபனம் செய்யும் காலத்தில் ஆதார பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கத் திருமேனி களுக்குப் பூஜைகள் நடைபெறுவதை பக்தர்களும் பொது மக்களும் அறிய 1200 கிலோ எடை உள்ள மிகப் பெரிய ஆலய மணி ஒன்றை 36 அடி உயர மணி மண்டபம் அமைத்து அந்த நேரத்திலாவது சிவநாமங்களை ஜெபிக்க வேண்டும் என்று நினைவூட்டுகின்றனர். 19 அடி உயரத்தில் கல்சூலமும் டமருகமும் ஆலயத்தின் முன்பகுதியில் காட்சிக்கு வைத்துள்ளனர். சிவலிங்கத் திருமேனிகளது தரிசனத்தைத் தனித்தனி சன்னதிகளில் கண்டு தரிசிக்கலாம்.

ஓம்காரேஸ்வரரான மத்திய லிங்கத்தை மனமுருகப் பிரார்த்தித்து பேரானந்தம் தரும்படி வேண்டுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x