

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் மகாராஷ் டிரத்தின் அன்ஜுமன் இஸ்லாம் இன்ஜினீ யரிங் கல்லூரி மாணவர்கள் 40 பேர் தொடர்பில் இருந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதி யைச் சேர்ந்தவர் ஆரிப் மஜீத். சிவில் இன் ஜினீயரான இவர் தனது நண்பர்கள் மூவ ருடன் சேர்ந்து, இராக் சென்று ஐஎஸ் தீவிர வாத அமைப்புடன் இணைந்து செயல் பட்டவர். அங்கு மோசமாக நடத்தப் பட்டதால் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி சமீபத்தில் நாடு திரும்பினார். அவரை போலீஸார் மும்பை விமான நிலையத்திலேயே கைது செய்தனர். அவரது வெளிநாட்டு தீவிரவாத தொடர் புகள், இந்தியாவில் அவருடன் தீவிரவாத தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதில். மஜீத் படித்த அன்ஜு மன் இஸ்லாம் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 40 பேர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவருமே இணைய தளம் மூலம் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலும், அவர்களின் செயல் பாடுகளை அறிந்துகொள்வதிலும் தீவிர மாக இருந்துள்ளனர். மத கொள்கை களை பின்பற்றுவதிலும், போதிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் ஐஎஸ் அமைப் புடன் இணைந்து போரிட காத்திருந்துள் ளனர். விசாரணை அமைப்பினர் இவர்கள் அனைவரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இது தொடர்பாக தீவிரவாத தடுப்புப் படை தலைவர் ஹிமான்சு ராய் கூறுகையில், அந்த கல்லூரில் தீவிரவாத கொள்கையுடன் குழுவாக செயல் பட்டவர்களை ஏற்கெனவே கண்டறிந்து விட்டோம். விசாரணையும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றார்.
போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாக அன்ஜுமன் இஸ்லாம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் முகாம்களில் 20க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர் களை தான் பார்த்ததாக மஜீத் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இஸ்லாமிய அரசை உருவாக்கும் அமைப்பு என்ற பெருமிதத்துடன் ஐஎஸ் அமைப்பில் மஜீத் இணைந்துள்ளார். ஆனால் கொலையும், பாலியல் பலாத் காரமும்தான் அவர்கள் முக்கிய வேலை என்பதை அங்கு சென்று தெரிந்து கொண்ட மஜீத் அதிர்ச்சியடைந்தார். இந்தியர்கள் உடல் அளவில் பலவீன மானவர்கள் என்று கூறி மஜீத், அவரது நண்பர்களுக்கு போரிட வாய்ப்பு தர வில்லை. கழிவறைகளை கழுவு வது போன்ற வேலைகளை செய்துள்ளார். இதனால் மஜீத் தப்பி இந்தி யாவுக்கு வந்துவிட்டார்.