Published : 12 Apr 2014 07:32 PM
Last Updated : 12 Apr 2014 07:32 PM

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தருகிறார் மோடி: பிரச்சாரக் கூட்டத்தில் மன்மோகன் சிங் பேச்சு

ஒரு நபரை மட்டுமே மையப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்கிறது. அவரோ (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி) நிறைவேற்ற முடியாக வாக்குறுதிகளை மக்க ளுக்குத் தருகிறார் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் கபூரை ஆதரித்து சனிக்கிழமை நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

பாஜக தனது தேர்தல் அறிக் கையை தாமதப்படுத்தியே வெளி யிட்டது.இது கண்டிக்கத்தக்கது. சில மாநிலங்களில் தேர்தல் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலை யில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தனது கொள்கைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதில் அதற்கு ஆர்வம் இல்லை என் பதையே இது காட்டுகிறது.

எத்தனையோ ஆண்டுகள் சென்றபிறகும் இப்போதும் பழைய படியே ராமர் கோயில் பிரச்சினை, 370-வது சட்டப்பிரிவு ஆகிய வற்றையே தனது தேர்தல் அறிக் கையில் எழுப்பியுள்ளது பா.ஜ.க.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிற மதத்தின ருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடப்பவர்கள். மாறுபட்ட கலாசாரங்களை கொண்ட உத்தரப் பிரதேசம் தனித்துவம் மிக்கது. இந்த கலாசாரத்துக்கு எதிராகவே பாஜகவின் கொள்கைகளும் செயல்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும்.

முசாபர்நகர் கலவரத்துக்கு பழி வாங்க வேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவர் (அமித் ஷா) பேசி இருப்பதை கேட்டிருப்பீர்கள். அந்த பேச்சை எப்போது வரை சகித்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் உங்கள் முன் உள்ள கேள்வி.

அரசியல் ரீதியாக எப்போதுமே மிகவும் முக்கியமான மாநிலம் உத்தரப்பிரதேசம். மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை இந்த தேர்தலிலும் இந்த மாநிலம்தான் தீர்மானிக்கப் போகிறது. ஒவ்வொரு பிரச்சினை யையும் அலசிப்பார்த்து சோனியா காந்தி, ராகுலின் கரத்தை நீங்கள் வலுப்படுத்தவேண்டும். மிகப் பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சி, நாடு விடுதலை பெற்றதி லிருந்தே நாட்டின் வளரச்சிக்காக பாடுபட்டுவருகிறது. முற்போக்குத் தனமான அரசை காங்கிரஸ் மட்டுமே கொடுக்கமுடியும். நாட்டை வளம் மிக்கதாக மாற்றக்கூடியது காங்கிரஸ்தான்.

பொருளாதார மேம்பாடு காணா மல் வறுமையை ஒழிப்பதும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதும் முடியாது. உலகம் முழுவதும் பொருளாதாரம் முடங்கிய போதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டிலிருந்து வறுமை நிலையை கணிசமாக குறைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பிரச்சினைகளை முன் வைக்க பாஜக தலைவர்கள் விரும்பு கிறார்கள். நாங்களோ தேசிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நாட்டை எப்போதுமே பிளவுபடுத்தி வரும் ஒரு கட்சியின் தலைமையில் அரசு அமைய வேண்டுமா என்பதே நாட்டின் இப்போதைய மிகப் பெரிய பிரச்சினை என்றார் மன்மோகன்சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x