Published : 24 Dec 2014 10:57 AM
Last Updated : 24 Dec 2014 10:57 AM

பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம்: ஆந்திர முதல்வர் அறிவிப்பு

ஆந்திர சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைநகர் மசோதா உட்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியது:

ஆந்திர மாநிலத்தில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். இவர்களை காக்கவே விவசாயிகளுக்கு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. தயவு செய்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை ஏழைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் வெள்ளை நிற குடும்ப அட்டைகளுக்கு தலா 20 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ துவரம்பருப்பு, அரை கிலோ வெல்லம், அரை லிட்டர் பாமாயில், நெய் (100 கிராம்) ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இது தவிர நகர்ப்புறத்தினருக்கு 4 லிட்டர், கிராமப் புற மக்களுக்கு 2 லிட்டர் வீதம் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x